தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மின் உபகரணங்கள் நடைமுறை நுகர்வோர் சேவையில் தாமதம்

மின் உபகரணங்கள் நடைமுறை நுகர்வோர் சேவையில் தாமதம்

மின் உபகரணங்கள் நடைமுறை நுகர்வோர் சேவையில் தாமதம்


UPDATED : அக் 07, 2026 07:21 PM

ADDED : அக் 07, 2026 07:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 07:21 PM ADDED : அக் 07, 2026 07:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லடம்: மின் உபகரணங்கள் கொள்முதல் மீண்டும் மண்டல அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மின்வாரியத்தில் எழுந்துள்ளது.

மின்வாரியத்தில் நுகர்வோர் சேவைக்குத் தேவையான மின் உபகரணங்கள், கடந்த காலங்களில் அந்தந்த மண்டல அலுவலகங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வந்தன. பின்னர், இந்த நடைமுறை முந்தைய தி.மு.க. ஆட்சியில் மாற்றப்பட்டு, மின் உபகரணங்கள் கொள்முதல் செய்வது சென்னை தலைமை அலுவலகத்தின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனால், ‘‘மின் உபகரணங்கள் தேவைப்படும் நேரங்களில் மண்டல அலுவலகங்கள் சென்னைக்கு விண்ணப்பித்து, அனுமதி பெற்ற பின்னரே அவற்றை பெற வேண்டிய நிலை உள்ளது. இதனால் நுகர்வோர் சேவைகளில் தாமதம் ஏற்படுகிறது; எனவே, பழைய நடைமுறையை மீண்டும் அமல்படுத்தி, மண்டல அலுவலகங்களிலேயே தேவையான மின் உபகரணங்களை இருப்பு வைத்து, உடனுக்குடன் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என மின் ஊழியர்கள் கூறுகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலைச்செல்வியிடம் கேட்டபோது, ‘‘ஆர்டர்கள் வருவதற்கு ஏற்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us