ADDED : அக் 15, 2024 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா செருகுடி மேல தெருவை சேர்ந்தவர் சுதாகர்,42. தனியார் எலக்ட்ரீசியன்.
நேற்று மாதானம் வடபாதி தெருவில் உள்ள வீரமணி என்பவரது வீட்டில் மின்சாரம் தடைபட்டது. அழைப்பின் பேரில் அங்கு வந்த சுதாகர், மழை பெய்து கொண்டிருந்த நிலையில் மின் கம்பத்தில் ஏறி பியூஸ் போடுவதற்காக ஒயரை சீவியுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தார்.
உயிருக்கு போராடிய அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். புதுப்பட்டனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். சுதாகருக்கு கீதா என்ற மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

