ADDED : டிச 12, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சண்டிகர், உ.பி., மாநிலங்களில் மின் வினியோக நிறுவனங்களை தனியாருக்கு விடுவதை எதிர்த்து போராடி வரும் ஊழியர்களுக்கு ஆதரவாக, சென்னை அண்ணா சாலையில், தமிழக மின் வாரியத்தின் கூட்டுக் குழுவினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில், 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, மின் வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்க பொதுச்செயலர் சுப்ரமணியன் கூறுகையில், ''சண்டிகர், உ.பி.,யில் மாநில மின் வினியோக நிறுவனங்களை தனியாருக்கு விடக்கூடாது.
''அம்மாநில ஊழியர்களுக்கு ஆதரவாக, தமிழக மின் வாரிய ஊழியர்கள் இருப்பர். இரு மாநிலங்களில் தனியார்மயத்தை அனுமதித்ததால், நாடு முழுதும் இதே நிலை ஏற்படும்; அதற்கு இடம் அளிக்கக் கூடாது,'' என்றார்.

