போராட்டம் நடத்தினால் சம்பளம் பிடித்தம்; மின் வாரியம் அதிரடி உத்தரவு
போராட்டம் நடத்தினால் சம்பளம் பிடித்தம்; மின் வாரியம் அதிரடி உத்தரவு
ADDED : நவ 11, 2025 04:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக மின் வாரியத்தில் காலியிடங்களை நிரப்புவது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 'தமிழக எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயிஸ் பெடரேஷன்' சங்கத்தினர், வரும் 15ம் தேதி, சென்னை மின் வாரிய தலைமை அலுவலகம் முன், தர்ணா போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர்.
அன்று, போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு, 'வேலையில்லை என்றால் சம்பளம் இல்லை' என்ற விதியின் கீழ், ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யுமாறு, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தர விட்டுள்ளது.

