ரூ.2,995 கோடிக்கு 2,400 மெகாவாட் மின்சாரம் வாங்குது மின் வாரியம்
ரூ.2,995 கோடிக்கு 2,400 மெகாவாட் மின்சாரம் வாங்குது மின் வாரியம்
ADDED : ஆக 13, 2025 03:17 AM

சென்னை: சட்டசபை தேர்தலின் போது, தடையில்லாமல் மின்சாரம் வினியோகம் செய்வதற்காக, மின்வாரியம், 2026 பிப்., 1 முதல் மே, 15 வரை, தினமும், 2,400 மெகாவாட் மின்சாரத்தை கொள் முதல் செய்ய உள்ளது. இதன் உத்தேச மதிப்பு, 2,995 கோடி ரூபாய்.
தமிழக மின் தேவை, தினமும் சராசரியாக, 16,000 மெகாவாட்டாக உள்ளது. இதுவே கோடை காலத்தில், 20,000 மெகாவாட்டை தாண்டுகிறது.
அனுமதி இவற்றில் இருந்து தினமும் கிடைக்கும் 5,200 மெகாவாட் மின்சாரம், மின் தேவையை பூர்த்தி செய்ய போதவில்லை. இதனால், மத்திய மின் நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு கோடை காலத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.
அந்த சமயத்தில், தடையில்லாமல் மின் வினியோகம் செய்வதற்காக, 2026 பிப்., 1 முதல் மே, 15 வரை, 24 மணி நேரமும், 2,400 மெகா வாட் மின்சாரம் வாங்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
இது தவிர தினமும், காலை மற்றும் மாலை, எட்டு மணி நேரம் உச்ச நேரத்தில், 2,400 மெகா வாட் மின்சாரம் வாங்கப்பட உள்ளது. இதற்கு டெண்டர் கோருவதற்காக, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது.
ஒரு மெகா வாட்டில் இருந்து ஒரு நாளைக்கு, 24,000 யூனிட்கள் கிடைக்கும். எனவே, 24 மணி நேரமும் வாங்கப்பட உள்ள, 2,400 மெகா வாட்டில் இருந்து, 5.76 கோடி யூனிட் பெறப்படும்.
டெண்டர் ஒரு நாளைக்கு, 5.76 கோடி யூனிட் என, வைத்துக் கொண்டால், 104 நாட்களுக்கு, 599 கோடி யூனிட் மின் சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
ஒரு யூனிட் மின் சாரம் விலை சராசரியாக, 5 ரூபாய் என, வைத்துக் கொண்டால், 2,995 கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு செலவாகும்.
ஏற்கனவே, ஐந்து ஆண்டுகளுக்கு, 1,500 மெகாவாட் மின்சாரத்தை, 24 மணி நேரமும் வாங்க, மின் வாரியம் டெண்டர் கோரியுள்ளது.
இதற்கு, 32,400 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.