உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 28, 2026 12:00 AM
ADDED : நவ 27, 2026 11:28 PM
அ நிறம் | அளவு
சென்னை: புதிய மின் இணைப்பு, மின் சாதனங்கள் இடமாற்றம், மின் இணைப்பு பெயர் மாற்றம், மின் கட்டணம் மாற்றம், மின் பளு குறைத்தல் அல்லது அதிகரித்தல் உள்ளிட்ட சேவைகளை பெற விரும்புவோர், https://www.tnpdcl.org என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
அதன்படி, அனைவரும் விண்ணப்பம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சில தினங்களாக, கூடுதல் மின் பளு, புதிய மின் இணைப்பு உள்ளிட்ட சேவைகளுக்கு விண்ணப்பிக்கும்போது, அந்த தளம் பாதியில் முடங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன.
உயரதிகாரிகள் தலையிட்டு, இணையதள பிரச்னையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மின் நுகர்வோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
