ADDED : ஏப் 22, 2025 06:26 AM

கோவை: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில், தர்ணா போராட்டம், டாடாபாத் மத்திய அலுவலகம் முன் நடந்தது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில், நிரந்தர பணியாளர்கள், ஒப்பந்த மற்றும் பகுதி நேர பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் எதிரொலித்திட, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில், மாலை நேர தர்ணா, மாநில அளவில் நடந்தது.
கோவை டாடாபாத், மத்திய அலுவலகம் முன் தர்ணா நடந்தது. இதில், மின்நுகர்வோரை பாதிக்கும், தனியார்மயப்படுத்தி வழி வகுக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். 40 ஆயிரம் ஆரம்பக்கட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கேங்மேன் பணியாளர்களின் சொந்த ஊர் மாறுதல், கள உதவியாளராக பதவி மாற்றம், 2019 டிச., 1 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உட்பட முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் திரளாக பங்கேற்றனர்.