வீட்டிற்குள் புகுந்த யானை: கட்டிலில் பதுங்கிய பெண்கள்
வீட்டிற்குள் புகுந்த யானை: கட்டிலில் பதுங்கிய பெண்கள்
ADDED : டிச 18, 2024 09:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
-பந்தலுார்: நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே படைச்சேரி என்ற இடத்தில் ஜானகி, 84, என்பவரது வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்ற யானை, கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த அரிசி உட்பட உணவு பொருட்களை எடுத்து ருசித்துள்ளது.
ஒரு மணி நேரம் வீட்டிற்குள் யானை நின்றிருந்த நிலையில், அருகில் இருந்த அறையில், ஜானகியும், பேத்தி ரேஷ்மாவும், பீதியுடன் கட்டிலுக்கு அடியில் பதுங்கி இருந்தனர்.
வனத்துறையினர் சப்தம் எழுப்பி, யானையை விரட்டினர். அங்கிருந்து சென்ற யானை அருகில் இருந்த விவசாய தோட்டத்தில், 40 பாக்கு மரங்கள், அப்பகுதியில் இருந்த ராமசாமி மற்றும் மணவாளன் ஆகியோரின் வீடுகளை சேதப்படுத்தியது.