sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாவட்ட நீதிபதிகளாக பதவியேற்க தகுதி நிர்ணயம்!: 7 ஆண்டுகள் வக்கீலாக இருந்தால் போதும்

/

மாவட்ட நீதிபதிகளாக பதவியேற்க தகுதி நிர்ணயம்!: 7 ஆண்டுகள் வக்கீலாக இருந்தால் போதும்

மாவட்ட நீதிபதிகளாக பதவியேற்க தகுதி நிர்ணயம்!: 7 ஆண்டுகள் வக்கீலாக இருந்தால் போதும்

மாவட்ட நீதிபதிகளாக பதவியேற்க தகுதி நிர்ணயம்!: 7 ஆண்டுகள் வக்கீலாக இருந்தால் போதும்

8


ADDED : அக் 10, 2025 02:22 AM

Google News

8

ADDED : அக் 10, 2025 02:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியாக வழக்கறிஞராக பணியாற்றியவர்கள், மாவட்ட நீதிபதிகளாக நேரடியாக நியமனம் செய்ய தகுதியுடையவர்கள்' என, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. மாவட்ட நீதிபதிகள் நியமனம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், அரவிந்த் குமார், சதீஷ் சந்திர சர்மா, வினோத் சந்திரன் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ஏழு ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியவர், மாவட்ட நீதிபதியாக நேரடியாக நியமனம் செய்ய தகுதி பெறுவார்.

ஆனால், ஒருவர் ஐந்து ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிவிட்டு, பின், 10 ஆண்டுகள் இடைவெளிவிட்டு மீண்டும் இரண்டு ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினால், அவர் மாவட்ட நீதிபதி பதவிக்கு தகுதி பெறமாட்டார்.

அவர் இடைப்பட்ட காலத்தில் வழக்கறிஞராக இல்லை என்பது தான் கருத்தில் கொள்ளப் படும்.

எனவே, ஏழு ஆண்டுகள் தொடர்ந்து வழக்கறிஞராக பணியாற்றிவரை மட்டுமே மாவட்ட நீதிபதியாக நியமிக்க முடியும். மாவட்ட கூடுதல் நீதிபதி நியமனத்திற்கான தகுதி என்பது, தேர்வு செய்யும் நேரத்தில் பரிசீலிக்கப்படும். விண்ணப்பிக்கும் காலத்தில் கருத்தில் கொள்ளப்படாது.

வழக்கறிஞராக பணியாற்றி பெறும் அனுபவத்தை விட, நீதித்துறை அதிகாரிகள் பெறும் அனுபவம் அளப்பரியது. எனவே, அத்தகைய திறமை வாய்ந்த நீதித்துறை அதிகாரிகளை, மாவட்ட நீதிபதி பதவிக்கு நியமனத்திற்கான போட்டியில் இருந்து விலக்கி வைப்பது நியாயம் இல்லை.

அரசு பிளீடர்கள், அரசு உதவி வழக்கறிஞர்கள், நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களாக பயிற்சி பெற்று வருபவர்கள் மாவட்ட நீதிபதி பதவிக்கு நேரடியாக விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்களாக கருதப்படுகின்றனர்.

நீதித்துறை அலுவலர்களான இவர்கள், மாவட்ட நீதிபதி பதவிக்கு போட்டியிடக்கூடாது என கூறுவது முரண்பாடாக இருக்கிறது.

மேலும் ஜூனியர்களாக இருப்பவர்கள், சீனியர்களுக்கு முன்பாக பதவி உயர்வு பெறுவதால், மற்றவர்களுக்கு மனவருத்தம் ஏற்படும் என்ற வாதத்தையும் நிராகரிக்கிறோம்.

ஏனெனில், தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு ஒருவர் மாவட்ட நீதிபதி பதவிக்காக பணியமர்த்தப்படுகிறார். இதனால், மற்றவர்கள் மனவருத்தம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

அனைவருக்கும் சமவாய்ப்பு என்பதை உறுதிசெய்யும் வகையில், மாவட்ட நீதிபதி மற்றும் கூடுதல் நீதிபதி பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது, விண்ணப்ப தேதியின்போது, 35 ஆக பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

அனைத்து மாநில அரசுகளும் உயர் நீதிமன்றங்களுடன் கலந்தாலோசித்து, இன்னும் மூன்று மாத காலத்துக்குள்ளாக உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப விதிகளை திருத்த வேண்டும்.

இவ்வாறு அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

- டில்லி சிறப்பு நிருபர் -






      Dinamalar
      Follow us