சென்னை கோயில்களுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
சென்னை கோயில்களுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
ADDED : மார் 06, 2024 04:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை கோயில்களுக்கு இ-மெயில் மூலம் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் பல கோயில்களில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் உள்ள கோயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இமெயில் வந்துள்ளது. அதாவது, 'Bomb Blast in Chennai Temple Soon' என jaffersait@outlook.com என்ற இமெயில் முகவரி மூலம் மிரட்டல் விடுக்கும் மெயில், பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்துள்ளது.
இதனையடுத்து சென்னை பெருநகர காவல்த்துறையை தொடர்புகொண்டு பெங்களூரு போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்கின்றனர்.

