85 பதவிகளுக்கு மின்வாரியம் ஒப்புதல் ஊழியர்கள் கோபம்
85 பதவிகளுக்கு மின்வாரியம் ஒப்புதல் ஊழியர்கள் கோபம்
ADDED : ஜூன் 11, 2025 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில், 14 துணைமின் நிலையங்களில், 85 புதிய பதவிகளுக்கு, மின் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க பொதுச் செயலர் சுப்ரமணியன் கூறியதாவது:
தற்போது களப்பிரிவில், 30,000 உட்பட, அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து, 50,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், ஒருவரே அதிக வேலைகளை செய்ய வேண்டியிருப்பதால், பணிச்சுமை அதிகம் உள்ளது.
எனவே, புதிய திட்டங்களுக்கு புதிய பதவிகளை உருவாக்கி, காகிதத்தில் மட்டும் ஒப்புதல் அளிப்பதை எப்படி ஏற்க முடியும்? அதற்கு ஏற்ப காலியிடங்களை நிரப்ப, விரைந்து ஆட்களை தேர்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.