ADDED : ஜூலை 08, 2025 10:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக அரசின் நிதித்துறை சிறப்பு செயலராக அருண் சுந்தர் தயாள் உள்ளார். இவர், நிதித்துறை ஊழியர்களிடம் கண்டிப்புடன் நடந்ததாக கூறப்படுகிறது.
அதனால், அதிருப்தி அடைந்த அரசு அலுவலர்கள் 400க்கும் மேற்பட்டோர், நேற்று மாலை தலைமை செயலகத்தில் நிதித்துறை செயலர் உதயசந்திரன் அலுவலகம் முன் திரண்டனர். நிதித்துறை சிறப்பு செயலருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால், அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, நான்கு பேர் உதயசந்திரனை சந்தித்து, அருண் சுந்தர் தயாள் குறித்து புகார் கூறினர்.