தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/காலி மது பாட்டில் பெறும் திட்டம்: அனைத்து மாவட்டத்திலும் அமல்

காலி மது பாட்டில் பெறும் திட்டம்: அனைத்து மாவட்டத்திலும் அமல்

காலி மது பாட்டில் பெறும் திட்டம்: அனைத்து மாவட்டத்திலும் அமல்


ADDED : நவ 27, 2024 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2024 04:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'டாஸ்மாக்' கடைகளில், மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம், 10 மாவட்டங்களில் செயல்பாட்டில் உள்ள நிலையில், மற்ற மாவட்டங்களிலும் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்கிறது. 'குடி'மகன்கள் மது அருந்தி விட்டு, காலி பாட்டில்களை சாலைகளில் வீசி செல்கின்றனர். இதனால், கால்நடைகள் மட்டுமின்றி, மனிதர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தப் பிரச்னை, சுற்றுலா தலங்களில் அதிகம் உள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி, காலி மது பாட்டில்களை, மது கடைகளிலேயே திரும்ப பெற டாஸ்மாக் முடிவு செய்தது.

தற்போது, நீலகிரி, பெரம்பலுார், கோவை, நாகை, திருவாரூர், தர்மபுரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள, டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்கள் திரும்ப பெறப்படுகின்றன. அதன்படி, மது பாட்டில் விற்கப்படும் போது, கூடுதலாக, 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

காலி பாட்டில்களை கடைகளில் வழங்கியதும், 10 ரூபாய் திரும்ப வழங்கப்படும். இத்திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் விரைந்து செயல்படுத்தும் பணியில், டாஸ்மாக் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இம்மாதம் முதல், அனைத்து மாவட்ட மதுக்கடைகளிலும் காலி பாட்டில்கள் திரும்ப பெறப்பட இருந்தது. மழை உள்ளிட்ட காரணங்களால், வரும் ஜனவரியில் இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us