இ.எம்.எஸ்., விவேகானந்தா வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
இ.எம்.எஸ்., விவேகானந்தா வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
ADDED : மார் 29, 2025 06:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த இருவேல்பட்டு இ.எம். சுப்ரமணிய ரெட்டியார் விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் இரண்டாம் ஆண்டு விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு, பள்ளி முதல்வர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். தாளாளர் சூரியநாராயணன் வரவேற்றார்.
விவேகானந்தா கல்விக் கழக பொருளாளர் ஷ்ரவன்குமார் டோடி, துணைச் செயலாளர் ராமமூர்த்தி, விழுப்புரம் நகர மன்ற முன்னாள் சேர்மன் ஜனகராஜ் வாழ்த்தி பேசினர்.
விழாவில், புதுச்சேரி 'தினமலர்' வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
விழாவில், 'அறிவோம் ஐந்திணை' தலைப்பில் மாணவர்களின் நாடகம், நடனம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.