சென்னை:அண்ணாமலை நடைபயணத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பு
சென்னை:அண்ணாமலை நடைபயணத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பு
ADDED : பிப் 09, 2024 07:12 PM

சென்னை: சென்னையில் பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலையின் பேரணிக்கு முறையான அனுமதி பெறாததால் நடைபயணம் மேற்கொள்ள போலீசார் அனுமதி மறுத்து உள்ளனர்.
காவல்துறைசார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
ஆவடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் 11-ம் தேதி நடைபெறும் எண் மண் என் மக்கள் யாத்திரைக்கும் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். நடைபயணத்துக்கு முறையாக அனுமதி கேட்கப்பட வில்லை . நடைபயணத்திற்கு பதில் நேரடியாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்ல மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
முன்னதாக பச்சையப்பன் கல்லூரி எதிரே தனியார் பள்ளியில் நடத்த திட்டமிட்டிருந்த பொது கூட்டம் இடம் மாற்றம் செய்யப்பட்டது. அவை தற்போது சென்னை சென்ட்ரல் மின்ட் தங்க சாலையில் பொதுக்கூட்டம் மட்டும் நடத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

