கடப்பாரை, சுத்தியுடன் அமைச்சர் துரைமுருகன் அறையை உடைத்த அமலாக்கத்துறை அதிகாரிகள்
கடப்பாரை, சுத்தியுடன் அமைச்சர் துரைமுருகன் அறையை உடைத்த அமலாக்கத்துறை அதிகாரிகள்
UPDATED : ஜன 03, 2025 10:13 PM
ADDED : ஜன 03, 2025 07:57 PM

வேலூர்: அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், கடப்பாரை மற்றும் சுத்தி மூலம் அறையை உடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில், இன்று (ஜன.,03) வேலுார் மாவட்டம் பள்ளிக்குப்பம் நடு மோட்டூர் பகுதியில் உள்ள தி.மு.க., நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதேபோல், காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்த் மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோரின் வீடுகளிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இரவு நேரமாகியும் இந்த சோதனை நீடித்து வருகிறது.
வீட்டின் உள்ளே இருக்கும் அமைச்சர் துரைமுருகனின் அறை பூட்டி இருப்பதால், அதனை திறந்து சோதனை நடத்த அதிகாரிகள் முயன்றனர். இதனால், கடப்பாரை , சுத்தி மற்றும் உளியை எடுத்து வருமாறு பணியாளர்களிடம் கூறினர். அதனைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள், கையில் கடப்பாரை, சுத்தி போன்ற ஆயுதங்களுடன் துரைமுருகனின் வீட்டுக்குள் சென்றுள்ளனர். உள்ளே பூட்டிக்கிடக்கும் அவரது அறையை அதிகாரிகள் உடைத்து சோதனையில் ஈடுபட்டனர்.
மூத்த அமைச்சர் ஒருவரின் வீட்டில் கடப்பாரை, சுத்தியை எடுத்துச் சென்று அதிகாரிகள் சோதனை நடத்தும் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.