இன்ஜின் பழுதால் நின்ற கொல்லம் ரயில் : விருதுநகரில் 3 மணி நேரம் தவித்த பயணிகள்
இன்ஜின் பழுதால் நின்ற கொல்லம் ரயில் : விருதுநகரில் 3 மணி நேரம் தவித்த பயணிகள்
ADDED : ஜூலை 30, 2011 04:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : இன்ஜின் பழுதால் கொல்லம்-மதுரை பயணிகள் ரயில், விருதுநகரில் நிறுத்தப்பட்டது.
பயணிகள் மூன்று மணி நேரம் தவித்தனர். கொல்லத்தில் இருந்து நேற்று முன் தினம் மாலை 4 மணிக்கு புறப்பட்ட ரயில், இரவு நெல்லை வந்த போது இன்ஜினில் பழுது ஏற்பட்டது. குறைந்த வேகத்தில் நேற்று காலை 5.30 மணிக்கு விருதுநகர் வந்து சேர்ந்தது. இங்கு அதிகாலை 3.30 மணிக்கு வர வேண்டிய ரயில் இரண்டு மணி நேரம் தாதமாக வந்தது. விருதுநகருக்கு வந்த போது ரயிலை இயக்க முடியாமல் போனதால், மதுரைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுரையிலிருந்து வந்த மற்றொரு இன்ஜின் மூலம், காலை 8.30 க்கு புறப்பட்டு மதுரை சென்றது. இதனால் பயணிகள் மூன்று மணி நேரம் தவித்தனர்.