உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 02, 2026 10:59 PM
அ நிறம் | அளவு
சென்னை: அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், 422 இன்ஜி., கல்லுாரிகளில், ஒரு லட்சத்து 98,825 பி.இ., - பி.டெக்., இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இவற்றில், 2026 - 27ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது.
மொத்தமுள்ள இடங்களில், 72.57 சதவீதம் இடங்கள் நிரம்பி உள்ளன. மீதம், 54,530 பி.இ., - பி.டெக்., இடங்கள் காலியாக உள்ளன.
இந்நிலையில், துணை கலந்தாய்வு மாணவர் சேர்க்கையில் பங்கேற்க, 14,500 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தர வரிசை பட்டியல், இன்று மாலை வெளியாகிறது.
தொடர்ந்து, நாளை காலை முதல், மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லுாரிகளை தேர்வு செய்யலாம் என, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
