பொறியியல் விண்ணப்ப பதிவு துவங்கியது: ஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம்
பொறியியல் விண்ணப்ப பதிவு துவங்கியது: ஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம்
UPDATED : மே 06, 2024 12:26 PM
ADDED : மே 06, 2024 11:12 AM

சென்னை: பொறியியல் பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்ப பதிவு இன்று (மே 6) துவங்கியது. ஜூன் 6 வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்ப பதிவு செய்யலாம்.
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கான மதிப்பெண்களுடன் கூடிய ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகம் முழுவதும் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 92.37% , மாணவிகள் 96.44% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் 91.32 சதவீத தேர்ச்சி கிட்டியுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பி.இ., பி.டெக் ஆகிய பொறியியல் பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்ப பதிவு துவங்கியது.
இன்று (மே 6) முதல் ஜூன் 6 வரை https://www.tneaonline.org என்ற முகவரியில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்ப பதிவு செய்யலாம். பொறியியல் படிப்பு விண்ணப்பங்களுக்கான சான்றிதழ்களை ஜூன் 12 வரை அப்லோடு செய்யலாம். மேலும், ஜூன் 12ம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் நம்பர் வெளியிடப்படும் என்றும், ஜூன் 13 முதல் 30 வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும் எனவும், ஜூலை 10ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை, அறிவியல் படிப்பு
அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், வரும் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கு, இன்று முதல் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம். அதற்கான விண்ணப்பமும் துவங்கியது.