தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/‘சஸ்பெண்ட்’ உத்தரவை கண்டித்து பொறியாளர்கள் போராட்டம்

‘சஸ்பெண்ட்’ உத்தரவை கண்டித்து பொறியாளர்கள் போராட்டம்

‘சஸ்பெண்ட்’ உத்தரவை கண்டித்து பொறியாளர்கள் போராட்டம்


UPDATED : அக் 07, 2026 06:37 PM

ADDED : அக் 07, 2026 06:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 06:37 PM ADDED : அக் 07, 2026 06:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மும்மொழி பலகை விவகாரத்தில், பொறியாளர்கள் இரண்டு பேர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டதை கண்டித்து, மாநில நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள், நேற்று கருப்பு ‘பேட்ஜ்’ அணிந்து பணி செய்தனர்.

தேசிய நெடுஞ்சாலையில், மூன்று மொழிகளில் வழிகாட்டி பலகை அமைத்த விவகாரத்தில், துாத்துக்குடி உதவி கோட்ட பொறியாளர் மற்றும் களக்காடு உதவி பொறியாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

விதிமுறைகளை பின்பற்றி, மூன்று மொழிகளில் பெயர் பலகை அமைத்ததற்காக, பணி நீக்கம் செய்யப்பட்டது, நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ‘சஸ்பெண்ட்’ உத்தரவை ரத்து செய்யக் கோரியும், தமிழக நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் சங்கம் சார்பில், நேற்று அனைத்து கோட்டங்களிலும் பணிபுரியும், நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள், கருப்பு ‘பேட்ஜ்’ அணிந்து பணி செய்தனர்.

இது குறித்து, பொறியாளர்கள் சிலர் கூறுகையில், ‘தமிழக அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டு, நியாயமான தீர்வை வழங்கா விட்டால், அடுத்த கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம்’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us