ADDED : ஜன 03, 2025 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக தொடக்கக் கல்வித்துறையில் கற்றல் - கற்பித்தல் திறனை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன்படி, அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, 30 நாள் சான்றிதழ் படிப்பை, பெங்களூரில் உள்ள, 'ரீஜினல் இன்ஸ்டி டியூட் ஆப் இங்கிலிஷ்' மையம் வழங்க உள்ளது.
இதற்கு, தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களில் ஆர்வம் உள்ளவர்களில், கல்வி மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் தமிழகம் முழுதும், 50 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு வரும், 16 முதல், பெங்களூரில் உண்டு உறைவிட பயிற்சி, 30 நாட்கள் வழங்கப்படும்.
ஆங்கிலம் கற்பிப்பதில் உள்ள நுட்பங்கள், ஆங்கில மொழி பயன்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்படும். தொடர்ந்து பல கட்டங்களாக, ஆர்வம் உள்ள அனைவருக்கும் வாய்ப்பு ஏற்படுத் தித் தரப்படும் என, கல்வி அலுவலர்கள் கூறினர்.
- நமது நிருபர் -