சுரங்க பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி மாநில அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம்
சுரங்க பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி மாநில அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம்
UPDATED : நவ 26, 2026 09:04 PM
ADDED : நவ 26, 2026 09:04 PM
சென்னை: நிலக்கரி அல்லாத சுரங்க பணிகளுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதில், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையங்களுக்கு, கூடுதல் அதிகாரம் வழங்கி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கட்டுமான திட்டங்கள், சுரங்க பணிகளுக்கு, மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையங்கள், சுற்றுச்சூழல் அனுமதி வழங்குகின்றன. இது தொடர்பான அதிகார வரம்பு, தேவைக்கு ஏற்ப மாற்றப்படுகிறது. இது தொடர்பாக, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ள அரசிதழில் கூறியிருப்பதாவது:
மாநில அளவிலான ஆணையங்களின் செயல்திறன் அடிப்படையில், அவற்றுக்கான அதிகாரம் அதிகரிக்கப்படுகிறது. அந்த வகையில், 1,235 ஏக்கர் பரப்பளவு வரையிலான, நிலக்கரி சுரங்கங்களுக்கு, மாநில அளவிலான ஆணையங்கள், சுற்றுச்சூழல் அனுமதி வழங்குகின்றன. தற்போது, நிலக்கரி அல்லாத பிற வகை சுரங்கப் பணிகளுக்கு, மாநில ஆணையங்கள், 617 ஏக்கர் வரையிலான திட்டங்களுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி வழங்குகின்றன. இந்த அதிகார வரம்பு, 1,235 ஏக்கராக அதிகரிக்கப்படுகிறது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
