sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஒண்ணுமே புரியல... எனக்கே ரூ.12,000 கரண்ட் பில் வருது: மக்கள் மத்தியில் இபிஎஸ் கலகல பேச்சு

/

ஒண்ணுமே புரியல... எனக்கே ரூ.12,000 கரண்ட் பில் வருது: மக்கள் மத்தியில் இபிஎஸ் கலகல பேச்சு

ஒண்ணுமே புரியல... எனக்கே ரூ.12,000 கரண்ட் பில் வருது: மக்கள் மத்தியில் இபிஎஸ் கலகல பேச்சு

ஒண்ணுமே புரியல... எனக்கே ரூ.12,000 கரண்ட் பில் வருது: மக்கள் மத்தியில் இபிஎஸ் கலகல பேச்சு

17


ADDED : ஜூலை 25, 2025 07:48 PM

Google News

ADDED : ஜூலை 25, 2025 07:48 PM

17


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை: இஷ்டத்துக்கு மின் கட்டணத்தை எழுதுகின்றனர். என்ன கணக்கு வைத்து கணக்கிடுகின்றனர் என எங்களாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை. என் வீட்டுக்கு 12,000 ரூபாய் வருகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசினார்.

தமிழகம் முழுவதும் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தேர்தல் பிரசார பயணத்தின் மூலம் தினமும் மக்கள் மத்தியில் இ.பி.எஸ்., பேசி வருகிறார். அதன் ஒரு கட்டமாக அவர் இன்று புதுக்கோட்டை மாவட்டம் சென்றார்.

அங்குள்ள சத்தியமூர்த்தி சாலையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்றபடி பேசினார். அப்போது புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள், கல்லூரிகள், சுகாதார கட்டமைப்புகளை உருவாக்கியது உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு பேசினார்.

தொடர்ந்து அவர் மக்கள் மத்தியில் பேசியதாவது;

அ.தி.மு.க., ஆட்சியில் கொரோனா காலம், கஜா புயல் காலத்திலும் விலைவாசி ஏறவில்லை. ஆனால் இப்போது அனைத்து வரிகளும் திமுக அரசால் உயர்த்தப்பட்டு விட்டன. அதிலும் குறிப்பாக மின் கட்டணம் எப்படி கணக்கீடு செய்கிறார்கள் என்று எனக்கே இன்னமும் புரியவில்லை. இஷ்டத்துக்கு மின் கட்டணத்தை எழுதுகின்றனர்.

என்ன கணக்கு வைத்து கணக்கிடுகின்றனர் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. எங்களாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை. என் வீட்டுக்கு வழக்கமாக 4500 அல்லது 5000 ரூபாய் வரை மின்கட்டணம் வந்து கொண்டு இருந்தது.

ஆனால் இப்போது 12,500 ரூபாய் வருகிறது. நான் அதிகாரியிடம் கேட்டேன். அவர்கள் ஏதேதோ சொல்கிறார்கள். ஆகவே இப்படி மக்களை குழப்பி, மக்களிடம் இருந்து சுரண்டுகிற ஆட்சி தேவையா?

இந்த (திமுக) ஆட்சி வந்தபின்னர், 52 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் 5 சதவீதம் என 3 முறை 15 சதவீதம் உயர்த்தி, இப்போது 67 சதவீதமாக மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.

மின்கட்டண உயர்வால் நமக்கு வரவேண்டிய தொழிற்சாலைகள் எல்லாம் அண்டை மாநிலங்களுக்கு சென்று கொண்டிருக்கின்றன. எப்படி படித்தவர்களுக்கு வேலை கொடுக்க முடியும்? அதிமுக ஆட்சியில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன, செயல்பாட்டுக்கு வந்தன.

திமுக ஆட்சி வந்தபின்னர், இதுவரைக்கும் எத்தனை தொழில் வந்தது? எவ்வளவு முதலீடு ஈர்க்கப்பட்டது, எத்தனை பேர் வேலைவாய்ப்பு பெற்றனர்? இதை எல்லாம் கேட்டால் எதற்குமே பதில் இல்லை. இன்றைக்கு ஊழல் நடக்காத துறையே இல்லை.கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் என்பது தான் திமுகவின் கொள்கை.

நேர்மையான அதிகாரிகள் பழிவாங்கப்படுகின்றனர். மக்களை பாதுகாக்கும் அதிகாரிகள் பந்தாடப்படுகின்றனர். இந்த ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமில்லை, மக்களுக்கு பாதுகாப்பில்லை.

இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.






      Dinamalar
      Follow us