ADDED : ஜூலை 26, 2024 01:57 PM

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எனக்குறிப்பிட்டு மனுத்தாக்கல் செய்ததற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் இ.பி.எஸ்., தரப்பு மன்னிப்பு கோரியது.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பதவி மற்றும் பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில், முன்னர் இணை ஒருங்கிணைப்பாளர் என பதில் மனு தாக்கல் செய்த இ.பி.எஸ்., பிறகு பொதுச்செயலாளர் எனக்குறிப்பிட்டு மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, ‛‛பொதுச்செயலாளர் என எப்படி குறிப்பிட முடியும். அந்தப்பதவி தொடர்பான மனு நிலுவையில் உள்ள போது, எப்படி பதவியை கூற முடியும்'' எனக் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து, தவறுக்கு இ.பி.எஸ்., தரப்பு மன்னிப்பு கோரியது. திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை ஆக.,7 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.