இ.பி.எஸ்., தேர்தல் சுற்றுப்பயணம்: ஜூலை 7ல் கோவையில் துவக்குகிறார்
இ.பி.எஸ்., தேர்தல் சுற்றுப்பயணம்: ஜூலை 7ல் கோவையில் துவக்குகிறார்
UPDATED : ஜூன் 27, 2025 07:54 PM
ADDED : ஜூன் 27, 2025 06:26 PM

சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., முதற்கட்டமாக வரும் ஜூலை 9 முதல் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரது பயணம் கோவையில் துவங்குகிறது.
சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அ.தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தினார். அப்போது, விரைவில் தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த சுற்றுப்பயணம் குறித்த விவரங்களை அ.தி.மு.க., வெளியிட்டு உள்ளது. இதன்படி, ' மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற நோக்கத்துடன், முதற்கட்டமாக வரும் ஜூலை 7 முதல் 21 வரை கோவை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இ.பி.எஸ்., பயண விவரம்:
ஜூலை 7 - கோவை புறநகர்
ஜூலை 8 - கோவை மாநகர்
ஜூலை 10 - விழுப்புரம்
ஜூலை 11- விழுப்புரம்
ஜூலை 12 - கடலூர் வடக்கு, கடலூர் தெற்கு
ஜூலை 14 - கடலூர் தெற்கு, கடலூர் மேற்கு, கடலூர் கிழக்கு
ஜூலை 15- மயிலாடுதுறை
ஜூலை 16- திருவாரூர், நாகை
ஜூலை 17 - நாகை, திருவாரூர்
ஜூலை18 - திருவாரூர், தஞ்சாவூர் கிழக்கு
ஜூலை 19 - தஞ்சாவூர் மேற்கு, தஞ்சாவூர் மத்தி, தஞ்சாவூர் மேற்கு
ஜூலை 21- தஞ்சாவூர் மத்தி, தஞ்சாவூர் தெற்கு