தி.மு.க.,வின் வெற்றிக்கு உதவிய இ.பி.எஸ்.,: தினகரன்
தி.மு.க.,வின் வெற்றிக்கு உதவிய இ.பி.எஸ்.,: தினகரன்
ADDED : டிச 08, 2024 02:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவையில் அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அளித்த பேட்டி:
கடந்த 2021 தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற பழனிசாமி மறைமுகமாக உதவியுள்ளார். தன் மீது வழக்கு வந்து விடக்கூடாது, என்ற பயத்தில், தி.மு.க.,வின் 'பி' அணியாக பழனிசாமி செயல்படுகிறார்.
வரும் 2026 தேர்தலுக்கு பின், அ.தி.மு.க.,வுக்கு பழனிசாமி மூடுவிழா நடத்துவார். அவரிடம் இரட்டை இலை உள்ளது என்பதற்காகவே நிர்வாகிகள் அவரிடம் உள்ளனர்.
யாருடைய லாபத்துக்காக கோடநாட்டில், கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன என, தமிழகம் முழுதும் தெரியும்.
ஆட்சியில் இருந்ததால், சாட்சிகளை அழித்து அவர்கள் தப்பினர். தவறு செய்தவர்கள் தண்டனை பெறுவர். தமிழக மக்கள், தி.மு.க., மீது வெறுப்பில் உள்ளனர். அவர்களுக்கு இருக்கும் ஒரே மாற்று, தேசிய ஜனநாயக கூட்டணிதான்.
இவ்வாறு அவர் கூறினார்.