இபிஎஸ்க்கு தெரிந்தது எல்லாம்...: முதல்வர் ஸ்டாலின் சாடல்
இபிஎஸ்க்கு தெரிந்தது எல்லாம்...: முதல்வர் ஸ்டாலின் சாடல்
ADDED : ஜன 28, 2026 08:10 PM

கும்பகோணம்: '' இபிஎஸ்க்கு தெரிந்தது எல்லாம் காலில் விழுவது, காலை வாரிவிடுவதுதான்,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் தான். திமுக தான் சிறுபான்மையினரை பாதுகாக்கும் காவல் அரண். இதனால் கும்பல் வன்முறை ஆகியவை தலையெடுக்காமல் உள்ளது. இந்த அமைதி சூழ்நிலை சிலரின் கண்களை உறுத்துகிறது. தங்கள் அடிமைகளாக இருக்கும் சிபிஐ, அமலாக்கத்துறை அமைப்புகள் மூலம் மிரட்டி தங்களுக்கான கூட்டணியை உருவாக்கி மேடை ஏறி உள்ளனர்.
துரோகம், தோல்விக்கு அடையாளமாக உள்ள 10 தோல்வி பழனிசாமி பயணத்தை தொடர்கிறது. இபிஎஸ் துரோகத்தை எண்ணிப் பார்த்தால் சீனப்பெருஞ்சுவரை விட நீளமானது. அவருக்கு தெரிந்தது காலில் விழுவது. காலை வாரி விடுவது.
குடியுரிமை சட்டத்தை திமுக எதிர்த்தது. ஆனால், அதிமுக ஆதரித்ததால் சட்டமானது. வக்ப் சட்டத்தை அதிமுக எதிர்க்கவில்லை. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆட்சிக்கு வந்ததும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினோம்.அதிமுகவின் சதியை உணர வேணடும்பாஜ கூட்டணி ஆட்சி அமைந்தால், அது வளர்ச்சியடைந்த மாநிலத்தை நாசப்படுத்தும். அதனை தடுக்கும் துணிச்சல் திமுக கூட்டணிக்கு தான் உண்டு. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

