கனமழையால் பயிர்கள் சேதம்! விவசாயிகளுக்கு இழப்பீடு தர இ.பி.எஸ். வலியுறுத்தல்
கனமழையால் பயிர்கள் சேதம்! விவசாயிகளுக்கு இழப்பீடு தர இ.பி.எஸ். வலியுறுத்தல்
ADDED : நவ 27, 2024 01:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கனமழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கை;
தமிழகம் முழுவதும் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், கனமழையால் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சுமார் 1,500 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை உரிய அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு தகுந்த நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.