உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 19, 2026 05:57 PM
ADDED : நவ 19, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
சேலம்: எர்ணாகுளம் – பாட்னா சிறப்பு வார ரயில், வெள்ளிதோறும் இரவு, 9:30க்கு எர்ணாகுளத்தில் புறப்பட்டு ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், விஜயவாடா, ராஜமுந்திரி, புவனேஸ்வர், கரக்பூர் வழியே திங்கள் அதிகாலை, 3:30 மணிக்கு பாட்னாவை அடைகிறது. இந்த ரயில் டிச., 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மறுமார்க்க ரயில், செவ்வாய்தோறும் நள்ளிரவு, 12:10 மணிக்கு பாட்னாவில் புறப்பட்டு வியாழன் காலை, 10:45 மணிக்கு எர்ணாகுளத்தை அடைகிறது. இந்த ரயில் டிச., 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
