UPDATED : பிப் 05, 2025 10:14 PM
ADDED : பிப் 05, 2025 07:13 AM
முழு விபரம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று (பிப்.,05) காலை 7:00 மணிக்கு துவங்கி மாலையில் நிறைவுபெற்றது. மக்களோடு மக்களாக வரிசையில் நின்று, மாவட்ட கலெக்டர் ராஜகோபால் ஓட்டளித்தார். மாலை 5 மணி நிலவரப்படி 64.02% ஓட்டுப் பதிவாகி உள்ளது என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
தி.மு.க., வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 46 பேர் களத்தில் உள்ளனர். பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., பா.ஜ., தேர்தலை புறக்கணித்துள்ளன.
ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 128 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 17 ஆயிரத்து 381 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 37 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் உள்ளனர்.
2,27,237 பேர் ஓட்டளிப்பதற்காக 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. சூரம்பட்டி ஓட்டுச்சாவடியில் தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார் ஓட்டளித்தார்.
'மக்கள் அனைவரும் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்' என தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் அனைத்து வாக்கு சாவடிகளிலும் மக்கள் ஓட்டளித்து வருகின்றனர். தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 8ம் தேதி அறிவிக்கப்படும்.
உ.பி., இடைத்தேர்தல்!
உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதிக்கும் இன்று (பிப்.,05) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு துவங்கி ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. இங்கு மாலை 5மணி நிலவரப்படி 64.02 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.