ஈரோடு மதிமுக எம்.பி., கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி?
ஈரோடு மதிமுக எம்.பி., கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி?
ADDED : மார் 24, 2024 03:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மதிமுக எம்.பி., கணேசமூர்த்தி தனது வீட்டில் தற்கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ம.தி.மு.க.,வைச் சேர்ந்த கணேசமூர்த்தி, ஈரோடு தொகுதி எம்.பி.,யாக உள்ளார். இந்த முறை ஈரோடு தொகுதியை தி.மு.க., எடுத்துக் கொண்டது. இதனால் கணேசமூர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இன்று( மார்ச் 24) அவரது வீட்டில் தென்னைக்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. உடல்நலன் பாதிக்கப்பட்ட அவர், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மேல்சிகிச்சைக்கு கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிகிறது.

