sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'100 மணி நேரம் கூட சபை நடப்பதில்லை!'

/

'100 மணி நேரம் கூட சபை நடப்பதில்லை!'

'100 மணி நேரம் கூட சபை நடப்பதில்லை!'

'100 மணி நேரம் கூட சபை நடப்பதில்லை!'


ADDED : பிப் 22, 2024 02:36 AM

Google News

ADDED : பிப் 22, 2024 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''சட்டசபையை 100 நாட்கள் நடத்துவதாக கூறிவிட்டு, இப்போது 100 மணி நேரம் கூட பேச அனுமதிப்பதில்லை,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி புகார் கூறினார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

பழனிசாமி: ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 100 நாட்கள் சட்டசபையை நடத்துவதாக கூறினீர்கள். இப்போது, 100 மணி நேரம் கூட சபையை நடத்துவதில்லை. பட்ஜெட் குறித்து ஒரே நாள் விவாதம் வைத்தால் எப்படி பேச முடியும்?

சபாநாயகர் அப்பாவு: மானிய கோரிக்கை ஒவ்வொரு நாளும் நடக்கும்.

பழனிசாமி: மானிய கோரிக்கையில் 5 நிமிடம் வழங்கினால், ஒரு துறை குறித்து எப்படி பேச முடியும்?

சபாநாயகர்: வாய்ப்பு தர மாட்டோம் என்று மறுக்கவில்லை. உங்கள் ஆட்சியில் சட்டசபை ஒரு நாள், இரண்டு நாள் கூட நடந்த வரலாறு உள்ளது.

பழனிசாமி: கொரோனா காலத்தை தவிர்த்து, போதுமான இடைவெளி விட்டு சபையை நடத்தியுள்ளோம். எதிர்க்கட்சிகள் கூறிய பிரச்னைகளை கேட்டு தீர்த்து வைத்தோம்.

அமைச்சர் துரைமுருகன்: அலுவல் ஆய்வு கூட்டத்தில், என்ன முடிவு செய்யப்படுகிதோ, அதன்படிதான் நாங்கள் நடந்து கொள்கிறோம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us