எனக்கே கூட வாய்ப்பில்லாமல் போகலாம்; அமைச்சர் பொன்முடி சொல்ல வருவது என்ன? விறுவிறுப்பான விவாதம்
எனக்கே கூட வாய்ப்பில்லாமல் போகலாம்; அமைச்சர் பொன்முடி சொல்ல வருவது என்ன? விறுவிறுப்பான விவாதம்
ADDED : அக் 19, 2024 08:21 AM

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் வீடியோ வடிவில் வழங்கப்படுகிறது.
இன்றைய நிகழ்ச்சியில்
தி.மு.க., முக்கிய தலைவர்களில் ஒருவராக இருப்பவர் பொன்முடி. முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் இருந்தே திமுக ஆட்சியில் முக்கிய துறைகளின் அமைச்சராக இருந்தவர். சமீபத்தில், பொன்முடியிடம் இருந்த உயர்கல்வித் துறை பறிக்கப்பட்டு, வனத்துறை வழங்கப்பட்டது.
தி.மு.க., நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, “2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், எனக்கே கூட சீட் கிடைக்காமல் போகலாம். ஆனால், தலைவர் ஸ்டாலின் யாரை தேர்தலில் வேட்பாளராக நிறுத்துகிறாரோ அவருக்காக நீங்கள் உழைக்க வேண்டும்” என்றார். இது குறித்து விவாதம் நடந்தது.
'2026ல் சீட் தர மாட்டாங்க! தி.மு.க., சீனியர்களுக்கு பொன்முடி வழியாக மெசேஜ் தரப்பட்டதா', பின்னணி என்ன என்பது குறித்து நடந்த சுவாரஸ்யமான விவாதம் இதோ!