sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செத்து சாம்பல் ஆனாலும் தனித்தே போட்டி; சீமான் திட்டவட்டம்

/

செத்து சாம்பல் ஆனாலும் தனித்தே போட்டி; சீமான் திட்டவட்டம்

செத்து சாம்பல் ஆனாலும் தனித்தே போட்டி; சீமான் திட்டவட்டம்

செத்து சாம்பல் ஆனாலும் தனித்தே போட்டி; சீமான் திட்டவட்டம்

32


ADDED : ஆக 11, 2025 04:00 PM

Google News

32

ADDED : ஆக 11, 2025 04:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: செத்து சாம்பல் ஆனாலும் தனித்தே போட்டியிடுவோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: நான் இந்த மண்ணின் மகன், இந்த மண்ணுக்கான மகன். எனக்கு ஓட்டளித்து என்னை அங்கீகரிக்க வைத்து உள்ளார்கள். நான் தோற்க்கிறேன் என்ற வார்த்தையை சொல்லலாமா, வளர்ச்சியின் எழுச்சி என்று சொல். 1.2ல் இருந்த கட்சி 8.2 வந்தது தமிழக அரசியலில் உண்டா? எல்லாம் செத்துப் போயிடும். களைத்து ஓடி விடுவான்.

விஜய் வருவதால் அவருக்கு ஓட்டு சதவீதம் குறைந்து போய்விடும். அவர் ஒண்ணுமே இல்லாமல் போய்விடுவார் என்று எதற்கு பயம் காட்டுகிறார்கள் என்பது தெரியுமா? ஐயோ கட்சி கலைந்திடுமா ஏதோ, ஒரு கூட்டணிக்கு போய்விடும் என்று நினைக்கிறார்கள். செத்து சாம்பல் ஆனாலும், நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம். நான் மக்களுக்கானவன் எனது வெற்றியும் தோல்வியும் மக்களுக்கானது அதை அவர்கள் தான் முடிவு செய்வார்கள்.

பேச சொல்லுங்க...!

இவ்வளவு நேரம் நான் பேசுவது போல் ஏதாவது ஒரு தலைவர்களை பேச சொல்லுங்க பார்க்கலாம். எஜமானர்கள் கோபித்துக் கொள்வார்கள். அந்தத் தனித்துவத்தை இழக்காமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எங்கள் முன்னோர் செய்த தவறை நான் செய்து விடக்கூடாது என்று நினைக்கிறேன்.

இந்தத் தவறை...!


மருத்துவர், திருமா, வைகோ, விஜயகாந்த் இவர்கள் செய்த தவறை, அவர்கள் பின்னாடி வரும் வழிதடத்தில் போகும் நான் செய்து விடக்கூடாது என்று நினைக்கிறேன். என்னை சிறையில் போட்டு பார்த்தார்கள், அவதூறு கிளம்பி பார்த்தார்கள். என்னென்னமோ பண்ணி பார்த்தார்கள், என்.ஐ.ஏ., ரெய்டு விட்டுப் பார்த்தார்கள்.

கரை தான் இருக்கிறது

எதுக்குமே நான் கலங்கவில்லையே, தனித்து நிற்க வேண்டும் தனித்துவத்தை இழந்து விடக்கூடாது. தனித்து நின்றாலும் தனித்துவத்தோடு நிற்க வேண்டும். 36 லட்சம் வாங்கினவன் இன்னும் 36 லட்சம் வாங்கி ஏறி ஏறி வந்து விட மாட்டேனா. கடலையே கடந்துவிட்டேன் இன்னும் கரை தான் இருக்கிறது. இவ்வாறு சீமான் கூறினார்.






      Dinamalar
      Follow us