1,000 ரூபாய் கொடுத்தாலும் தேர்தலில் அது எடுபடாது
1,000 ரூபாய் கொடுத்தாலும் தேர்தலில் அது எடுபடாது
ADDED : டிச 23, 2025 07:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முன்னாள் முதல்வர் கருணாநிதி தனக்கு துரோகம் இழைத்ததாக எம்.ஜி.ஆர்., கூறியுள்ளார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் கருணாநிதியை எதிர்த்தார். தமிழகத்தில் போதைப்பொருட்கள் புழக்கத்தால் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பது உண்மை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், நர்ஸ்கள், துாய்மை பணியாளர்கள் மட்டுமின்றி, மாற்றுத் திறனாளிகள் கூட வீதிக்கு வந்து போராடும் நிலை உள்ளது. கடந்த தேர்தலின்போது, தி.மு.க., அளித்த வாக்குறுதிகளில், 80 சதவீதத்தை கூட நிறைவேற்றவில்லை. என்ன தான் மகளிருக்கு 1,000 ரூபாய் கொடுத்தாலும், தி.மு.க.,விற்கு தேர்தலின்போது மக்கள் தக்க பாடம் புகட்டுவர். மக்கள் அளிக்கும் தீர்ப்பை வைத்து தான், யார் துாய சக்தி, யார் தீய சக்தி என்பது தெரியவரும். தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகள், எங்களை தங்கள் கூட்டணிக்கு வருமாறு தொடர்ந்து வலியுறுத்துகின்றன. நாங்கள் தான் யோசித்து முடிவெடுப்பதாக சொல்லி இருக்கிறோம்.
- தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க.,

