கண் அடிச்சாலும் வராது; கையை பிடிச்சு இழுத்தாலும் வராது: துரைமுருகன் "கிளு கிளு கல கல"!
கண் அடிச்சாலும் வராது; கையை பிடிச்சு இழுத்தாலும் வராது: துரைமுருகன் "கிளு கிளு கல கல"!
UPDATED : மார் 06, 2024 11:53 AM
ADDED : மார் 06, 2024 11:41 AM

சென்னை: 'தி.மு.க., கூட்டணியில் இருப்பவர்கள் கண் அடித்தாலும் வரமாட்டார்கள், கையைப் பிடித்து இழுத்தாலும் வர மாட்டார்கள்' என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
சென்னையில் தி.மு.க கூட்டணியில் உள்ளவர்களை அ.தி.மு.க., கூட்டணிக்கு இழுப்பதாக சொல்கிறார்கள் என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பதில்: ஒரு படத்தில் கூறுவது போல, தி.மு.க., கூட்டணியில் இருப்பவர்கள் கண் அடித்தாலும் வரமாட்டார்கள், கையைப் பிடித்து இழுத்தாலும் வரமாட்டார்கள் என சிரித்து கொண்டு பதில் அளித்தார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தி.மு.க கூட்டணியில் இருப்பவர்களை தொடர்ந்து கூட்டணியிலேயே இருக்குமாறு கெஞ்சுகிறார்கள் என சொல்வதாக நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு துரைமுருகன், ‛‛ ஜெயக்குமார் எப்போதும் அப்படிதான். தமாசாக பேசுவார்'' என பதில் அளித்தார்.
அ.தி.மு.க., கூட்டணியில் பார்வர்ட் பிளாக் கட்சி
தி.மு.க., கூட்டணியில் மரியாதை இல்லை. அதனால் வெளியேறிவிட்டோம் என அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி அறிவித்துள்ளது. இதையடுத்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் கதிரவன், கட்சி நிர்வாகிகள் உடன் இ.பி.எஸ்.,யை சந்தித்து அ.தி.மு.க.,வில் இணைந்தார். பின்னர் தேனி அல்லது தென் மாவட்டங்களில் ஒரு தொகுதி வழங்க கோரிக்கை விடுத்துள்ளதாக கதிரவன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

