sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காலை உணவை தொடர்ந்து பள்ளிகளில் மாலை ஊட்டச்சத்து சிற்றுண்டி: சமூக நலத்துறைக்கு பரிந்துரை

/

காலை உணவை தொடர்ந்து பள்ளிகளில் மாலை ஊட்டச்சத்து சிற்றுண்டி: சமூக நலத்துறைக்கு பரிந்துரை

காலை உணவை தொடர்ந்து பள்ளிகளில் மாலை ஊட்டச்சத்து சிற்றுண்டி: சமூக நலத்துறைக்கு பரிந்துரை

காலை உணவை தொடர்ந்து பள்ளிகளில் மாலை ஊட்டச்சத்து சிற்றுண்டி: சமூக நலத்துறைக்கு பரிந்துரை

8


ADDED : ஜன 09, 2026 10:29 PM

Google News

ADDED : ஜன 09, 2026 10:29 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: காலை உணவு திட்டத்தை தொடர்ந்து, பள்ளிகளில் தினமும் மாலை நேரத்தில் மாணவர்களுக்கு, 'நியூட்ரிஷன் ஸ்நாக்ஸ்' எனப்படும், ஊட்டச்சத்து சிற்றுண்டி வழங்க, சமூக நலத் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதிச் செய்யும் நோக்கில், மதியத்தில் சத்துணவு திட்டம் மற்றும் காலை உணவு திட்ட செயல்படுத்தப்படுகிறது. காலை உணவுத் திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வரை படிக்கும் மாணவர்களுக்கு, வெண் பொங்கல், ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, இட்லி உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன.

சத்துணவுத் திட்டத்தின் கீழ், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, மதியம் சாதம், சாம்பார், கீரை, காய்கறிகள், முட்டை உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், கூடுதலாக தினசரி மாலை நேரத்தில், பள்ளி மாணவர்களுக்கு வாழைப் பழம், ஆப்பிள், சிறுதானிய வகைகள் அடங்கிய மாலை சிற்றுண்டியாக, 'நியூட்ரிஷன் ஸ்நாக்ஸ்' வழங்க வேண்டும் என, பொதுச் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து துறை சார்பில், சமூக நலத் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us