ADDED : நவ 14, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக சட்டசபைக்கான தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதனால், தி.மு.க.,வினர் ஒவ்வொருவரும் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.
அவர்களின் நன் மதிப்பைப் பெற்று, தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்கச் செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியல் சீர்திருத்தப் பணியை தி.மு.க., ஏற்கவில்லை. அதற்காக, அந்தப் பணியில் கட்சியினர் கலந்து கொள்ளாமல் இருந்து விடக் கூடாது. அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது, தி.மு.க.,வில் ஒன்றிய சேர்மனாக இருப்போர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலருக்கும் எம்.பி., - எம்.எல்.ஏ., ஆகும் வாய்ப்பு விரைவில் வர உள்ளது. அந்த வாய்ப்பை ஒவ்வொருவரும் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் அந்த உணர்வில் கட்சிக்காக பாடுபட்டால், தமிழகத்தில் மீண்டும் தி.மு.க., ஆட்சி அமையும் என்பது உறுதி. - நேரு, தமிழக அமைச்சர், தி.மு.க.,

