உள்ளடக்கத்திற்கு செல்ல

எல்லோருக்கும் சுகர் இருக்கிறது: ஓ.பி.எஸ். ஆதங்கம்
எல்லோருக்கும் சுகர் இருக்கிறது: ஓ.பி.எஸ். ஆதங்கம்
ADDED : ஆக 18, 2026 06:02 AM

அ நிறம் | அளவு
சென்னை: சட்டசபையில் நடந்த விவாதம்:
அமைச்சர் அருண்ராஜ்: கடந்த ஆட்சிகளில், மக்கள் பயனடைய கூடிய நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருந்தாலும், தவறுகளும் நடந்தன.
சபாநாயகர் பிரபாபகர்: ஊழல் குறித்து அமைச்சர்கள் பேசும் போது, ஆதாரத்துடன் பேச வேண்டும். ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைக்க கூடாது.
தி.மு.க.,-ஓ.பன்னீர் செல்வம்: அமைச்சர் அருண்ராஜ், 3:30 மணிக்கு பேச தொடங்கி, 52 நிமிடங்கள் ஆகி விட்டன. உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு பதிலுரையாக தான் அவர் பேச வேண்டும். தேவையில்லாத பிரச்னையை பற்றி பேசக்கூடாது.
நிறைய பேருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. மயங்கி மயங்கி விழுகின்றனர். பயங்கர வேதனையாக இருக்கிறது; சமாளிக்க முடியவில்லை. இல்லையென்றால், அமைச்சர் பதிலுரையை, நாளை காலையில் வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.
