ADDED : மார் 01, 2024 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
அரசின் சாதனை களையும், பட்ஜெட் சிறப்பம்சங்களையும் இல்லம்தோறும் சேர்க்க வேண்டும். 'இல்லம்தோறும் ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
அதன் வெற்றியை தொடர்ந்து, 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற பெயரில், 161 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என, அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

