ADDED : டிச 18, 2025 10:46 PM

திருப்பூர்: திமுக தீயசக்தி என்பதை எம்ஜிஆர், ஜெயலலிதா முன்னரே கூறிவிட்டனர். தீய சக்தி என்பது திமுகவின் அடையாளம்,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
திருப்பூரில் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: திமுக தீய சக்தி என எம்ஜிஆர், ஜெயலலிதா முன்னரே சொல்லிவிட்டனர். அக்கட்சி தீய சக்தி என நீண்ட காலமாக பாஜவும் சொல்லி வருகிறது. தீய சக்தி தான் திமுக.
திமுகவை தீயசக்தி என வீட்டில் இருக்கும் பெண்மணி சொல்கிறார். இது தான் முக்கியம். இந்த சினிமா ஸ்டார் சொல்றாங்க, பெரிய அரசியல் தலைவர் சொல்றாங்க. பெரிய உயரத்தில் இருக்கிறவர் சொல்றாங்க என்பதை விட வீட்டில் இருக்கும் சாதாரண பெண்மணி, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் சொல்வதை நான் கேட்கிறேன். இது பெரிய வார்த்தை.
சாமானிய அடித்தட்டு மக்களும் தீய சக்தி என்கின்றனர். இது ஓட்டு இயந்திரத்தில் ஓட்டுக்களாக மாறும். திமுக தீய சக்தி என்பது ஊரறிந்த ஒன்று. யாரோ மேடையில் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. எம்ஜிஆர் எப்போவோ சொல்லிவிட்டனர். தீய சக்தி என்ற வார்த்தை திமுகவின் அடையாளம். இதில் மாற்றுக் கருத்து இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

