என் மனதின் குரலாக ஒலித்தார் செங்கோட்டையன் : ஓபிஎஸ் மகிழ்ச்சி
என் மனதின் குரலாக ஒலித்தார் செங்கோட்டையன் : ஓபிஎஸ் மகிழ்ச்சி
UPDATED : செப் 05, 2025 11:08 AM
ADDED : செப் 05, 2025 09:55 AM

தேனி: அதிமுகவில் அதிருப்தியில் இருந்து வரும் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செங்கோட்டையன் குறித்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேசியுள்ளார்.
அதிமுகவில் அதிருப்தியில் இருந்து வரும் செங்கோட்டையன் இன்று கோபியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேச உள்ளார்.
இந்த நிலையில், அவர் குறித்து தேனியில் ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது; அதிமுகவின் மூத்த முன்னோடி செங்கோட்டையன் எம்ஜிஆரால் கட்சி தொடங்கிய போதில் இருந்து, இந்தக் கட்சிக்காக பாடுபட்டு கொண்டிருக்கிறார். எம்ஜிஆர் காலத்திலேயே மாவட்ட செயலாளராக இருந்துள்ளார்.
தொடர்ந்து, 23 ஆண்டுகளாக மாவட்ட செயலாளராகவும், கட்சியின் தலைமை நிலைய செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளனர். கட்சியின் உயர்மட்ட பொறுப்புகளில் இருந்து அனைத்து மக்களையும் அரவணைக்கும் தன்மையுடன், கட்சிக்காக அவர் ஆற்றிய பணி உண்மையிலேயே அளப்பரியது, எனக் கூறினார்.
என் மனதின் குரலாக ஒலித்த செங்கோட்டையன்
செங்கோட்டையன் பேட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் பேசியதாவது; பல்வேறு சூறாவளிகள், சுனாமிகள் கட்சிக்கு வந்த போதும், நிலையாக நின்று, இந்தக் கட்சியை வளர்ப்பதற்காக அவர் பாடுபட்டுள்ளார். அவர் எந்த நடவடிக்கை எடுத்தாலும், கட்சி ஒருங்கிணைக்க வேண்டும். அப்படி செய்தால், தான் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் நிறுவ முடியும் என்பதைத் தான், தனது மனதின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவரது எண்ணம், மனசாட்சி நிறைவேற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதற்காகத் தான் நாங்களும் போராடி கொண்டிருக்கிறோம். எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற முடியாத நிலை சூழல் நான்கைந்து ஆண்டுகளாக நிலவி வருகிறது, இவ்வாறு அவர் கூறினார்.