sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேர்வு மைய குளறுபடி; தமிழகம் முழுவதும் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு ஒத்திவைப்பு

/

தேர்வு மைய குளறுபடி; தமிழகம் முழுவதும் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு ஒத்திவைப்பு

தேர்வு மைய குளறுபடி; தமிழகம் முழுவதும் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு ஒத்திவைப்பு

தேர்வு மைய குளறுபடி; தமிழகம் முழுவதும் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு ஒத்திவைப்பு

45


UPDATED : பிப் 08, 2026 12:45 PM

ADDED : பிப் 08, 2026 10:19 AM

Google News

45

UPDATED : பிப் 08, 2026 12:45 PM ADDED : பிப் 08, 2026 10:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 08) நடக்க இருந்த குரூப்2, குரூப் 2 ஏ தேர்வுகள், ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. தேர்வு மையம் ஒதுக்குவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக கடைசி நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் இன்று( பிப்.,08) குரூப்2, குரூப் 2 ஏ தேர்வுகள் நடைபெற இருந்தன. உதவி ஆய்வாளர், சார்பதிவாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக இருக்கும் 828 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற இருந்தது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.

இந்த சூழலில், இன்று சென்னையில் சில இடங்களில் தேர்வு மையங்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டன. இதனால் குளறுபடி ஏற்பட்டது. தேர்வு எழுத வந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு நடக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் அறிவித்துள்ளார்.

இதனால் தேர்வு எழுத ஆர்வத்துடன் வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாக வெளியூர்களில் இருந்து வந்தவர்கள், கடைசி நேரம் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இபிஎஸ் கண்டனம்


இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியதாவது: தமிழகம் முழுவதும் இன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வானது, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடிகளால் ஒத்திவைக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் நிர்வாகம் என்பது எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை, இந்த ஒரு நிகழ்வே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்வு, தேர்வு நாளன்று ஒத்திவைக்கப்படுவது தமிழகத்தின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறை.

தொழில்நுட்ப கோளாறு

அதுவும், பல இடங்களில் தேர்வர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதே தெரியாமல் தேர்வு எழுதியுள்ளனர் என்ற பேரதிர்ச்சியான செய்திகளும் வருகின்றன. தொழில்நுட்ப கோளாறு என ஒற்றை வரியில் தப்பிக்க முயலுகின்ற திமுக ஆட்சியாளர்கள், குரூப்- 2 என்பது எவ்வளவு முக்கியமான தேர்வு? இளைஞர்களின் பல ஆண்டுகால உழைப்பும் நம்பிக்கையும் சிதைந்துள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள். தமிழகத்தை 'சூப்பர்ஸ்டார்' மாநிலமாக மாற்றிவிட்டதாக வாய்கிழிய மேடையில் பேசும் முதல்வர் ஸ்டாலின் ஒரு தேர்வைக் கூட உருப்படியாக நடத்த வக்கில்லாத கையாலாகாத அரசு தான் உங்கள் திமுக அரசு.

நடவடிக்கை

ஏற்கனவே 5.5 லட்சம் வேலைகளைத் தரப்போகிறோம் என 2021ல் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எல்லாம் காற்றில் பறந்துக்கொண்டு இருக்க, இருக்கின்ற தேர்வுகளைக் கூட ஒழுங்காக நடத்த வக்கற்ற திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வு குளறுபடிகளை அதிகாரிகள் மீது மட்டும் சுமத்தி, அவர்கள் மீது மட்டும் கண்துடைப்பு நடவடிக்கை எடுக்காமல், இந்த தவறுகள் எதிர்காலத்தில் வராமல் இருக்க முறையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். தேர்வர்கள் அனைவரும் நம்பிக்கையோடு முயற்சிகளை தொடருங்கள்,

2026ல் அமையவுள்ள அதிமுக அரசானது, இளைஞர்களின் கனவுகளை ஈடேற்றும் அரசாக இருக்கும். இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.

வலியுறுத்தல்

அதேபோல், அடிப்படை ஏற்பாடுகளைக் கூட செய்யாததால் டிஎன்பிஎஸ்சி குரூப்2, 2ஏ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. போட்டித் தேர்வை நடத்தக் கூட திமுக அரசுக்கு துப்பு இல்லை. டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

அண்ணாமலை கண்டனம்


இன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப்2, குரூப் 2 ஏ தேர்வுகள், தேர்வு மையங்களை அமைப்பதில் திமுக அரசு செய்த குளறுபடியால் ரத்து செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசுத் தேர்வுகளுக்கான அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்ய முடியாத கையாலாகாத நிலையில், திமுக அரசு செயல்பட்டு வருகிறது. அரசுப் பணிகளுக்காக, பல ஆண்டு காலம் கடுமையாக தங்கள் உழைப்பைக் கொடுத்து, தேர்வு மையங்களுக்குச் சென்ற இளைஞர்களின் கனவு பறிக்கப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டு காலம் இல்லாத இந்தக் குளறுபடி, லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசுப் பணி வழங்கும் வரலாறு கொண்ட திமுக அமைச்சர்களால் நடத்தப்பட்டதா என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.

லஞ்சம் ஊழல் நிறைந்த, நிர்வாகத் திறனற்ற கையாலாகாத அரசை நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் , தமிழக இளைஞர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.






      Dinamalar
      Follow us