sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தூக்குத் தண்டனை நிறைவேற்றம் எப்படி? அதிகாரிகள் தகவல்

/

தூக்குத் தண்டனை நிறைவேற்றம் எப்படி? அதிகாரிகள் தகவல்

தூக்குத் தண்டனை நிறைவேற்றம் எப்படி? அதிகாரிகள் தகவல்

தூக்குத் தண்டனை நிறைவேற்றம் எப்படி? அதிகாரிகள் தகவல்


UPDATED : ஆக 29, 2011 03:40 PM

ADDED : ஆக 28, 2011 11:22 PM

Google News

UPDATED : ஆக 29, 2011 03:40 PM ADDED : ஆக 28, 2011 11:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோர்ட் உத்தரவுப்படி, கைதியை தூக்கிலிடும் நடைமுறைகள் சிறையில் எவ்வாறு கடைபிடிக்கப்படுகின்றன, என்பது குறித்த தகவலை, சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களது கருணை மனுவை, ஜனாதிபதி நிராகரித்து விட்டதால், மூவரையும் செப். 9ம் தேதி தூக்கிலிட, சிறைத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி கைதிகள் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்வதற்கான பணிகள் துவங்கியுள்ளன. தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர், அமைப்புகள், கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், கைதிகளை தூக்கிலிடுவதற்கான முன்னேற்பாடுகளை சிறைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.



தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் நடைமுறைகள் குறித்து, சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்ட கைதிகள், சிறையில் தனித்தனி 'செல்'லுக்கு மாற்றப்பட்டுள்ளனர். முன்பிருந்ததை விட மிக தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு, பாதுகாப்புக்கு கூடுதல் எண்ணிக்கையில் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.



'வெயிட்' பார்த்து ஒத்திகை:தண்டனையை நிறைவேற்றுவதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு வந்ததும், அடுத்தகட்ட நடவடிக்கை துவங்கும். கைதிகள் ஒவ்வொருவரின் உடல் எடை, உயரம் பரிசோதிக்கப்படும். கைதியின் உயரம் மற்றும் எடைக்கு ஏற்ப தூக்குக் கயிறு தயார் செய்யப்படும். பின்னர், கைதியின் எடைக்கு நிகரான பொருளை கயிறுடன் இணைத்து, தூக்கு மேடையில் தூக்கிட்டு ஒத்திகை நடத்தப்படும். கயிற்றின் தாங்கும் திறன், தொங்கும் இழுவை நீளம் பரிசோதிக்கப்பட்ட பின், அதே போன்ற உறுதி, நீளத்துடன் கயிறுகள் தயார் நிலையில் வைக்கப்படும்.



மருத்துவப் பரிசோதனை:தூக்குத் தண்டனை பெரும்பாலும் அதிகாலை நேரத்திலேயே நிறைவேற்றப்படும். தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக, கைதிகளின் உடல் ஆரோக்கியத்தை டாக்டர்கள் பரிசோதிப்பர். மனநிலையும், உடல் நிலையும் சரியாக இருப்பதாக, டாக்டர்கள் சான்று அளித்ததும், அடுத்த நடவடிக்கை அமல்படுத்தப்படும்.



கடைசி ஆசை என்ன:தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பாக கைதியின் கடைசி ஆசை குறித்து, சிறை அதிகாரிகள் வினா எழுப்புவர். சம்பந்தப்பட்ட கைதி, தனது கடைசி ஆசை, எதிர்பார்ப்பை தெரிவிக்கலாம். அவை சட்டப்படியாக ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பின், ஆசையை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.



தூக்குக்கு அழைத்து வருதல்:கைதியை தூக்கிலிடுவதற்கான நேரம் முன் கூட்டியே நிர்ணயிக்கப்பட்டிருக்கும். காவலர்களின் பாதுகாப்பில் தூக்கு மேடைக்கு அழைத்து வரப்படும் கைதி, இரு கைகளும் பின்புறமாக கட்டப்பட்டு மேடையில் நிறுத்தப்படுவார். அவருக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவை, சிறை கண்காணிப்பாளர் வாசிப்பார்; உடன், டாக்டர்கள் இருப்பர். அதன் பின், கைதியின் முகம், தலை கறுப்பு நிற துணியால் மறைக்கப்படும். தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும், 'லிவர்' இயக்கப்படும். தூக்கு மேடையின் கீழ் கைதியின் காலடியில் இருக்கும் விசை நகர்ந்ததும், உடல் தொங்கி தண்டனை நிறைவேறும்.



13 நிமிடம் வரை தொங்கும்:தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதும் கைதியின் உடல், மேடையின் மீது 13 நிமிடம் வரை தொங்கியவாறு இருக்கும்; அதுவரை, அருகில் யாரும் செல்லமாட்டார்கள்.அதன் பின், டாக்டர்கள் பரிசோதித்து மரணம் சம்பவித்ததை அறிவிப்பர். பிறகு, உடல் இறக்கப்பட்டு தனி அறைக்கு கொண்டு செல்லப்படும். தண்டனை நிறைவேற்றத்தின் போது, சிறையிலுள்ள பிற கைதிகள் அவரவர் 'செல்'லில் அடைக்கப்பட்டிருப்பர்.



தனித்தனியாக நிறைவேற்றம்:ஒன்றுக்கும் மேற்பட்ட கைதிகளை ஒரே நாளில் தூக்கிலிட வேண்டியிருந்தால், தனித்தனியாகவே தண்டனை நிறைவேற்றப்படும். ஒரு கைதியை தூக்கிலிடுவதற்கான நடைமுறை கால அவகாசம் முடிந்ததும், அடுத்தடுத்த கைதிகளுக்கு நிறைவேற்றப்படும். தண்டனை நிறைவேற்றப்பட்ட பின், உறவினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும்.இவ்வாறு, சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us