அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்க: மா.செ., கூட்டத்தில் முதல்வர் அறிவுரை
UPDATED : ஜூன் 07, 2025 06:23 PM
ADDED : ஜூன் 07, 2025 02:20 PM

சென்னை: ''தி.மு.க., அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைத்து உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்'' என மா.செ., கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
தி.மு.க., மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஜூன் 7) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், சட்டசபை உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது, முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
* ஒவ்வொரு பூத்திலும் 30 சதவீத வாக்காளர்களை சேர்க்க வேண்டும்.
* பொதுமக்கள், வாக்காளர்கள் கூறும் குறைகளை கேட்டு, பொறுமையுடன் பதில் அளிக்க வேண்டும்.
* தி.மு.க., அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைத்து உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
*கடமைக்கு உறுப்பினர்களை சேர்க்க வேண்டாம். 30% புது வாக்காளர்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.