தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சிறு, குறு நிறுவனங்களுக்காக ஏற்றுமதி விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிறு, குறு நிறுவனங்களுக்காக ஏற்றுமதி விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிறு, குறு நிறுவனங்களுக்காக ஏற்றுமதி விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : அக் 07, 2026 02:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2026 02:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: புதுச்சேரியில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் உலகாவிய சந்தைகளை எதிர்கொள்ள, அந்நிறுவனங்களை தயார்படுத்த, புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாகியில், இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு மற்றும் புதுச்சேரி தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டு கழகம் இணைந்து, ஏற்றுமதி தயார் நிலை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளன.

இந்நிகழ்ச்சிகள், காரைக்காலில் நாளை, 8ம் தேதியும், புதுச்சேரியில், 9ம் தேதியும், ஏனாமில், 16ம் தேதியும், மாகியில், 27ம் தேதியும், புதுச்சேரியில், 29ம் தேதியும், காரைக்காலில், 30ம் தேதியும் நடக்க உள்ளன. இவற்றில் ஏற்றுமதி, இறக்குமதி பதிவு உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

மேலும் ஏற்றுமதி நடைமுறை, ஆவணங்கள், சட்ட விதிமுறைகள், சர்வதேச பண பரிவர்த்தனை, ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கும் அரசு திட்டங்கள் மற்றும் ஆதரவுகள், வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்கும் வாங்குவோர், விற்போர் சந்திப்புக்கு, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை தயார்படுத்துதல் ஆகிய தலைப்புகளில் அமர்வுகள் நடக்க உள்ளன.

இதுதொடர்பான கூடுதல் தகவல்களை, 97899 10003 என்ற மொபைல் போன் எண்ணில் தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us