ADDED : செப் 01, 2011 03:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : ஜூலை மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 81.79 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்த மாதத்தில் 29.3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 16.14 பில்லியன் டாலர்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போன்று இந்தியாவின் இறக்குமதி அளவும் 51.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இன்ஜினியரிங், பெட்ரோலியம் பொருட்கள், ஆபரண கற்கள், நகைகள் உள்ளிட்டவைகள் 8.7 பில்லியன் டாலர்கள் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.