திருமணம் செய்த ஆதீனம் மடத்தில் இருந்து வெளியேற்றம்
திருமணம் செய்த ஆதீனம் மடத்தில் இருந்து வெளியேற்றம்
UPDATED : நவ 12, 2024 08:16 PM
ADDED : நவ 12, 2024 08:15 PM

தஞ்சாவூர்:திருமணம் செய்து கொண்ட சூரியனார் கோவில் ஆதீனத்தை, கிராம மக்கள் மடத்தை விட்டு வெளியேற்றி, மடத்துக்கு பூட்டு போட்டனர்.
தமிழகத்தில் உள்ள 18 சைவ ஆதீனங்களில் ஒன்றான சூரியனார் கோவில் ஆதீனம் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 28வது மடாதிபதியாக இருப்பவர் மகாலிங்க சுவாமிகள், 54.இவர் கர்நாடகாவைச் சேர்ந்த ஹேமாஸ்ரீ என்ற பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
ஆதீனமாக இருப்பவர் எப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்பது பற்றிய சர்ச்சை கிளம்பிய போது, இதற்கு முன் இருந்த மடாதிபதிகள் திருமணம் செய்துள்ளனர் என்று மகாலிங்க சுவாமிகள் விளக்கம் அளித்தார்.

இதையடுத்து ஆதீனம் மகாலிங்க சுவாமிகள், அதே ஊரில் இருக்கும் பஞ்சாயத்து அலுவலகத்தில் உட்கார வைக்கப்பட்டார். ஆதீனத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் இரண்டு தரப்பினர் வாக்குவாதம் செய்து கொண்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

