சென்னை:மதுரை - குஜராத் மாநிலம் ஓக்ஹா இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை, ஜன., 30ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளது.
குஜராத் மாநிலம் ஓக்ஹாவில் இருந்து மதுரைக்கு வாரந்தோரும் திங்கள் கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன. அதுபோல், மதுரையில் இருந்து ஓக்ஹாவுக்கு வெள்ளி கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்கள் பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், இந்த ரயில்சேவை மேலும் ஜன., வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளது.
அதன்படி, ஓக்ஹாவில் இருந்து ஜன., 8, 15, 22, 29ம் தேதிகளில் இரவு 10:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த 4வது நாளில் காலை 11:45 மணிக்கு மதுரைக்கு வரும். இதேபோல், மதுரையில் இருந்து ஜன., 5, 12, 19, 26, பிப்., 2ம் தேதிகளில் அதிகாலை 1:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த 3வது நாளில் காலை 10:20 மணிக்கு ஓக்ஹாவை சென்றடையும். மேற்கண்ட சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.