சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
ADDED : அக் 20, 2026 03:43 PM

- நமது நிருபர் -
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:
சுமார் 5.8 கிலோ மீட்டர் உயரம் வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இதே பகுதியில் உருவாக வாய்ப்பு உள்ளது.
சுமார் 3.1 கிலோ மீட்டர் உயரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து வடக்கு கடலோர ஆந்திர பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இன்று( அக்டோபர் 20)
சென்னை
திருவள்ளூர்
செங்கல்பட்டு
கடலூர்
விழுப்புரம்
தஞ்சாவூர்
திருவாரூர்
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை
ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்
கனமழை
ராணிப்பேட்டை,
காஞ்சிபுரம்,
கள்ளக்குறிச்சி,
திருச்சி,
அரியலூர்,
பெரம்பலூர்,
புதுக்கோட்டை,
சிவகங்கை,
தென்காசி,
தூத்துக்குடி,
திருநெல்வேலி மற்றும்
கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
மற்ற மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை(அக்டோபர் 21)
தூத்துக்குடி
திருநெல்வேலி
கன்னியாகுமரியில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
நீலகிரி,
கோவை,
ஈரோடு,
திருப்பூர்,
நாமக்கல்,
கரூர்,
தேனி,
திண்டுக்கல்,
தென்காசி,
மதுரை,
விருதுநகர்
புதுக்கோட்டை
தஞ்சாவூர்
திருவாரூர்
நாகை
மயிலாடுதுறை
புதுக்கோட்டை
சிவகங்கை மற்றும்
ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்யக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
